Friday 13 September 2013

கிறிஸ்துவின் இறப்பே... சிலுவையின் சிறப்பு...


கிறிஸ்துவின் இறப்பே... சிலுவையின் சிறப்பு...



இன்று ......

சிலுவையின் சிறப்பை சிந்திக்கும் நாள்

சிலுவையில் கிறிஸ்துவை சந்திக்கும் நாள்

மனிதத்தை மீட்டு புனிதத்தை உணர்த்திய 

மாபெரும் சின்னத்தை துதித்திடும் நன்னாள்!

இன்னாள் ஒரு நன்னாள் இயேசுவே அது உன்னால்!

ஆம்...

அவமதிப்பின் சின்னம் மதிப்பு பெற்றது 

இயேசுவே உன்னாலே!

அசிங்கத்தின் சின்னம் அழகு பெற்றது

இயேசுவே உன்னாலே!

அநீதியின் சின்னம் நீதியைப் பெற்றது

இயேசுவே உன்னாலே!

அகந்தையின் சின்னம் தாழ்ச்சியைப் பெற்றது

இயேசுவே உன்னாலே!

இருளின் சின்னம் அருளினைப் பெற்றது

இயேசுவே உன்னாலே!

இறப்பின் சின்னம் உயிர்ப்பு பெற்றது

இயேசுவே உன்னாலே!

உன்னாலே ...அது உன்னாலே...

இயேசுவே எல்லாம் உன்னாலே

உன்னால் சிறப்பு பெற்ற சிலுவையின் சிறப்பால்

பெற்றிடட்டும் புது சிறப்பு எம் வாழ்வும்!

சிலுவையின் சிறப்பால் எம் வாழ்வு சிறந்திட

அருள்வாயே எம் சிலுவை நாயகனே!

உம் அருளை நிதமும் அருள்வாயே!

******

0 comments: