My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

With my Jesuit Friends in Pune.

With My Jesuit Family in Kodaikanal after our Summer Meet, 2015.

Enacting in the SSU play 'It's Great to be Young' directed by beloved Cyril Desbruslais.,SJ.

Clicked during my visit to Liverpool.

Friday, 25 October 2013

ஆடு வேண்டாம் ...தமிழ் நாடு வேண்டும்..!



ஆடு வேண்டாம் ...தமிழ்  நாடு வேண்டும்..!

  


ஆடு....

வீட்டுக்கா...நாட்டுக்கா...இல்லை ஓட்டுக்கா.......

யோசி தமிழா.....யோசி.....

இலவசம்...


இலவசத்தில் தான் 

இயங்கிகொண்டிருக்கிறது இன்றைய மானுடம்......

உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டிய நாம்

இலவசம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறோமே.....

ஓட்டினை வாங்கிட...

ஆட்டினை வழங்கிடும் 

ஒய்யார அரசியல் எங்கேனும் கண்டதுண்டோ என் தோழா....

வீடுகள் மகிழ ஆடுகள் வழங்காமல் 

மதுபான கடைகளை மூடினாலே

 மகிழ்ச்சி தானாய் வரும் 

இதில் சந்தேகம் உண்டோ....? 

மன்னிக்கவும்.....

மதுபானக் கடைகளை மூடினால் 

இலவசமே இல்லாமல் போய் விடுமே....

இருந்தாலும் பரவாயில்லை என் தமிழ் உறவுகளே...

நீங்கள் காத்திருக்க வேண்டியது ஆட்டுக்காக அல்ல...

மாறாக...மதுபானக்கடைகளில் பூட்டுக்காக....

ஆடு வேண்டாம் ...தமிழ்  நாடு வேண்டும் !

*******

எல்லைக்கு அப்பால் .....


எல்லைக்கு அப்பால் .....



தொல்லைப் பேசியினைத்

தொட்டு தொட்டு


அவள் அனுப்பிய அன்புச்செய்தி


எல்லைக்கு அப்பால் இருந்த 


என் தொல்லைப்பேசியை


வந்தடையவில்லை


ஆனால் அது ஏனோ...


எங்கோ இருந்த என்


எண்ண அலைகளை


தொல்லைப் படுத்தி


முட்டி முட்டி


அன்பு முத்தங்கள் தந்தன....!


*************