Friday, 25 October 2013

ஆடு வேண்டாம் ...தமிழ் நாடு வேண்டும்..!



ஆடு வேண்டாம் ...தமிழ்  நாடு வேண்டும்..!

  


ஆடு....

வீட்டுக்கா...நாட்டுக்கா...இல்லை ஓட்டுக்கா.......

யோசி தமிழா.....யோசி.....

இலவசம்...


இலவசத்தில் தான் 

இயங்கிகொண்டிருக்கிறது இன்றைய மானுடம்......

உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டிய நாம்

இலவசம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறோமே.....

ஓட்டினை வாங்கிட...

ஆட்டினை வழங்கிடும் 

ஒய்யார அரசியல் எங்கேனும் கண்டதுண்டோ என் தோழா....

வீடுகள் மகிழ ஆடுகள் வழங்காமல் 

மதுபான கடைகளை மூடினாலே

 மகிழ்ச்சி தானாய் வரும் 

இதில் சந்தேகம் உண்டோ....? 

மன்னிக்கவும்.....

மதுபானக் கடைகளை மூடினால் 

இலவசமே இல்லாமல் போய் விடுமே....

இருந்தாலும் பரவாயில்லை என் தமிழ் உறவுகளே...

நீங்கள் காத்திருக்க வேண்டியது ஆட்டுக்காக அல்ல...

மாறாக...மதுபானக்கடைகளில் பூட்டுக்காக....

ஆடு வேண்டாம் ...தமிழ்  நாடு வேண்டும் !

*******

0 comments: