Thursday, 22 August 2013

கணிப்பொறியா...கழிப்பறையா....


கணிப்பொறியா...கழிப்பறையா....

                     கணிப்பொறி வேண்டாம் அரசே...

                                 கழிப்பறை கொடு.....





இது 21-ம் நூற்றாண்டு.....

வளரும் இந்தியாவில் வாடும் இந்தியர்கள்

எத்தனை..எத்தனை...?

ஒளிரும் இந்தியாவில் உருகும் இந்தியர்கள்

எத்தனை...எத்தனை...?

அமர்த்தியா சென் அவர்களின் பார்வையில் 

600 மில்லியன் இந்தியர்களுக்கு....அடிப்படை வசதி இல்லை...

என்ன கேவலம் இது....? 

இந்த கேவலம் புரிய வேண்டியவர்களுக்கு புரிவதில்லையே...

அறிய வேண்டியவர்கள் அறிந்தும் அறியாமலே உள்ளனரே....

இலவசம் என்ற பெயரில் ஒரு ஏமாற்றம் அல்லவா 

அரங்கேறிக் கொண்டிருக்கிறது...?



இலவசமாய் "கணிப்பொறி" கொடுக்கும்  தமிழகம்

காசுக்கு அல்லவா கழிப்பறை வழங்குகிறது..?

கழிப்பறை வசதியின்றி...

காட்டிலும், மேட்டிலும், இருட்டிலும்

கழிப்பிடம் தேடி அலையும்...

ஏழைகள் எத்தனை எத்தனை...

கணிப்பொறி கொடுத்து எம்மை கவிழ்த்தது போதும் அரசே...

எப்போது நீ அடிப்படை வசிதியான கழிப்பறை கொடுக்கப் போகிறாய்...?

தடுமாறும் தமிழ் உறவுகளே...

நாம் விழித்தெழுவது எப்போது....?

கலர் டி. வி யும் வேண்டாம்...கணிப்பொறியும் வேண்டாம்...

முதலில் கழிப்பறையைக் கொடு...!


- தைரியம்.

2 comments:

Zenith SJ said...

You made the people realise.

I request you to send this to some other Tamil magazines.

Unknown said...

Thank you dear for reading this and giving your comment!